படுக்கையறையில் போட்டோஷூட்…! கணவருடன் நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து வியப்பில் ரசிகர்கள்…!

சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். அப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி என்று இருந்த அமலா பால் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஒருசில படங்களில் நடித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தவர் கடந்த அக்டோபர் மாதம் காதலரை திருமணம் செய்வதாக அறிவித்தார்.

பின் பிரம்மாண்ட முறையில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணமாகி 3 மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். காதல் கணவருடன் ரொமாண்டிக் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு வரும் அமலா பால், படுக்கையறையில் எடுத்த புகைப்படங்களையும் தற்போது வெளியிட்டுள்ளார்.இப்போது சோசியல் மீடியாவில் அமலாபால் தன்னுடைய கர்ப்பகால போட்டோ சூட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் கூட கவர்ச்சியாக இருக்கும் உடைகளை அணிந்திருக்கிறார்.

அதோடு ‘இப்ப நான் மட்டுமல்ல என்னுடைய கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்’ என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார். ஒரு பெண் கர்ப்பம் அடையும் பொழுது அந்த கர்ப்பத்தை தனது கணவரும் தங்குகிறார் என்ற அர்த்தத்தில் இருக்குமோ என நினைத்தால், அவருடைய குட்டி தொப்பையை காட்டி அவரும் கர்ப்பமாக இருப்பதாக அமலாபால் கூறியுள்ளது, சோசியல் மீடியாவில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *