என்னை சுற்றி தொந்தரவு செய்யும் சூழ்நிலை…! அதெல்லாம் சொல்ல முடியாது…! பிரபல நடிகை மஹிமா நம்பியார் ஓபன் டாக்…!

நடிகை மஹிமா நம்பியார் சாரியில் தங்க நிறத்தில் மின்னும் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த நடிகை மஹிமா நம்பியார் ‘சாட்டை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். நடிகை மட்டுமில்லாமல் முறையாக பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞர் மற்றும் பாடகியும் கூட. கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சாட்டை இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மகிமா நம்பியார்.

இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23, ஆர்யா நடித்த மான மகாமுனி போன்ற படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாக உலா வந்தார்.அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு உள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் நடிகையாக இருப்பது சில விஷயங்கள் வெளிப்படையாக பேச முடியாது என்றும், எனக்கு அதில் உடன்பாடு இல்லை நான் எப்போது நேர்மையாக இருக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.என்னை சுற்றி தொந்தரவு செய்யும் சூழ்நிலை இருந்தால் அங்கு இருந்து நான் வந்து விடுவேன் என்று அதற்கு கோபப்படாமல் தற்போது பதில் அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *