25-பேர் என்னை ஏமாத்தி இருக்காங்க.. அவுங்க எல்லாரும்.. அந்தரங்க லீலையை லீக்ஸ் செய்த ஸ்ரீ ரெட்டி..!

பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும், சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக தெரிவித்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றினார்கள் என்று ஊடகங்கள் முன் புகார் கொடுத்தார்.

மேலும், புகாரளித்தது மட்டுமில்லாமல் ஆடையை கழட்டி பொது இடத்தில் போராடவும் செய்தார்.  இதில் தமிழ் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் இருந்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இதன்மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் பேட்டியொன்றில் சர்ச்சையாக பேசி உள்ளார். அந்த வகையில் வாய்ப்புக்காக நானும் சில அட்ஜஸ்மென்ட் செய்தேன். ஆனால், அப்படியும் 25 பேர் என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார்.

மேலும் கூறுகையில், தான் ஊடகங்களுக்கு முன் ஆடையை கழட்டியது தன்னுடைய அம்மா, அப்பா, தம்பிக்கு எப்படி இருந்திருக்கும் என்றும், தான் தன் அம்மா முன்பு கூட ஆடையை மாற்றமாட்டேன் எனவும், அப்போது தனக்கு கஷ்டமாக இருந்தது என்று தெரிவித்து கண்ணீருடன் ஸ்ரீ ரெட்டி பேட்டியளித்து உள்ளார்.

மேலும், இந்த அவமான வேறு யாருக்கும் வரக்கூடாது என்றும், என்றைக்கு தான் டாப்பை கழட்டினேனோ அன்னைக்கே தன் மானம் எல்லாமே போச்சு என்றும், இந்த 25 பேர் தன்னை ஏமாற்றி சீரழித்து விட்டதாக கூறியுள்ளார்.

முன்னதாக, படத்திற்கு தேவை என்றால் மட்டுமே கவர்ச்சி காட்டுங்கள், போட்டோஷூட்டில் அதீத ஆர்வம் காட்ட வேண்டாம் என்றும், ஒரு நடிகையாக இதை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். இவரது பழைய பேட்டியான இது தற்போது சமூகவலைத்தளங்களில் மீண்டும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *