செத்தே போயிருப்பேன்.. பாய்ஸ் பட நிர்வாண காட்சி.. பல ஆண்டு ரகசியத்தை வெளியிட்ட சித்தார்த்..!

43 வயதாகியும் பார்த்த கண்ணனுக்கு இன்னும் இளமையோடு இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார் .

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பாய்ஸ் படத்தில் கதாநாயகியை கவர நிர்வாணமாக ரோட்டில் ஓடும் காட்சி இடம் பெற்று இருக்கும். அந்த காட்சியின் போது உள்ளாடை இரண்டு விதவிதமாக அணிந்து நடித்ததாகவும், அப்படி பேண்ட்-ஐ கழட்டும் போது கதாநாயகியின் அம்மா ஷாக்காகி கத்திவிட்டார் என்றும், ஆனால் உசாராக நான் உள்ளே வேறொரு உள்ளாடை போட்டிருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாய்ஸ் படத்தின் காட்சியில் நடிகர் நகுல் பைக்கில் தன்னை ஏற்றிச்செல்லும் போது, தான் படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்ததால், அந்த காட்சியில் 20கிலோ மீட்டர் வேகத்தில் தான் நகுலை பைக்கை ஓட்டச்சொன்னதாகவும், காரணம் ஒரு ஆட்டோ தங்களுக்கு மேல் போகும் காட்சி இடம் பெற்று இருப்பதால், ஆனால் நகுல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் அந்த ஆட்டோவின் டயர் தன் தோல்பட்டையை தட்டியதால் அடிபட்டது என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் பைக்கை 20 கிலோ மீட்டருக்கு மேல் போகாதனு சொல்லியும் நகுல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதால் பைக் கீழே விழுந்து தன் கால் முழுவதும் அடி பட்டுவிட்டதாகவும், அந்த சீனில் தான் விழுந்து செத்து இருப்பேன் என்றும், யாராவது அந்த அடியின் தழும்பு பற்றி கேட்டால் அம்மணமா ஓடி அதான்னு சொல்லுவேன் என்று சித்தார்த் சிரித்தபடி காமெடியாக பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *