முத்தம் கொடுக்கும் இடம் அந்த இடத்தில் கொடுக்கிறது விசயமே இல்லை…! பிரபல நடிகர் ஓப்பன் டாக்…!

தொலைக்காட்சி சேனலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது முக்கிய நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் மணிகண்டன்.சமீபத்தில் ஜெய்பீம், குட் நைட் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார். தற்போது லவ்வர் என்ற படத்தில் நடித்துள்ள மணிகண்டன் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வந்துள்ளார்.’காதலும் கடந்து போகும்’, ‘காலா’, ‘விக்ரம் வேதா’ போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் மணிகண்டன். இவர் சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படடத்தில் அவருடைய நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார்.இந்நிலையில் நடிகர் மணிகண்டன் ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளிய ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரைப்படம் திரையுலகினரின் பாராட்டுகளை ஏற்கெனவே பெற்றுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ஓடிடி தளமான சோனி லைவ்வில் வெளியாகி உள்ளது. ஒரு பேட்டியில் முத்தம் கொடுக்கும் இடம் என்றால் லிப், கன்னம், நெற்றியிலா, உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது.

முத்தம் கொடுக்கும் ஏரியா என்பது லிப்போ, சிக்கோ, நெத்தியிலோ இல்லை, சம்மதமா என்பது தான் முக்கிய விசயம் என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவசங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஜிகே வாகினி புரொடக்‌சன்ஸ் சார்பில் ஷஷாங்க் வெண்ணலகண்டி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ரதன் மற்றும் பவன் இசையமைத்துள்ளனர். ஆர்.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்து ராஜேஷ் ராமகிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *