தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி.தற்போது குணச்சித்திர ரோலிலும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். இடையில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் சினிமா அரசியல் விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது 48 வயதாகும் கஸ்தூரி இளமை தோற்றத்திற்கு மாறி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கஸ்தூரியா இது என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
இவர் 1991 -ம் ஆண்டு வெளியான ‘ஆத்தா உன் கோயிலிலே’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல படங்களில் நடித்து வந்த இவர், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கஸ்தூரி, ஆண் பெண் எதிர்பார்ப்பு பற்றி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதில் அவர், எல்லா ஆண்களும் பெரிய இதயம் கொண்ட பெண்கள் வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் அப்படி பெரிய இதயம் கொண்ட பெண் பெரிய உணர்வுகளையும் கொன்று இருப்பார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. பெரிய இதயம் கொண்ட பெண்கள் சோகமாக, சோர்வாகவும் இருப்பார்கள் இருப்பினும். உங்களை அதிகமா நேசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.