தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா தற்போது தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகின்றார். சென்னையில் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை முடித்த அவர் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையானார்.தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யா என்பவரை 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக உலா வந்து கொண்டிருப்பவர்கள்தான் நடிகை சமந்தா அவர்கள். இவர் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் மக்கள் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமானவை விமர்சனம் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல் இவருக்கு சற்று உடல்நிலை குறைவு ஏற்பட்டது இதனால் இவர் மருத்துவமனை மற்றும் வெளிநாடுகள் சென்று இதற்கான சிகிச்சையை மேற்கொண்டார்.இந்த நிலையில் தற்போது இவர் குறித்து ஒரு தகவல் .வெளியாகி உள்ளது. நடிகை சமந்தாவின் ஜின் ட்ரைனர் ஜிம் செய்யலாமா என்று கேட்க அதற்கு என் உடல்நிலை சரியில்லை என்று சமந்தா கூறியுள்ளார்கள். இவர்கள் பேசிக்கொண்டு ஒரு ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.