40 வயது நடிகைக்காக போட்டிபோடும் விஜய், அஜித்…! பிளான் போட்டு தூக்கிய தயாரிப்பாளர்…! ஆச்சார்யத்தில் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், துணிவு படத்திற்கு பின் விடாமுயற்சி படத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை போட்டாலும் இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்காமல் இருந்து வருகிறது.விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருவதை நாம் அனைவரும் அறிவோம். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முன்னணி நடிகை திரிஷா நடித்துள்ளார். இந்த ஜோடி 13 வருடங்களுக்கு பின் லியோ படத்தில் தான் இணைந்துள்ளது.இந்த ஜோடியை திரையில் காணவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகை திரிஷா தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் செம பிசியான நடிகையாக மாறிவிட்டார். லியோ படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளிவந்தது. ஏற்கனவே படத்தின் அப்டே வரவில்லை என்று அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்து வருகிறார்கள். படத்தில் அஜித்திற்கு யார் ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற கேள்வி பலரிடம் எழுந்து வந்தது. அதில் பாலிவுட் நடிகைகளில் இருந்து நடிகை நயன் தாரா வரை பல பெயர்கள் அடிப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க

நடிகை திரிஷா கமிட்டாகி இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்த நிலையில் இப்படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம் திரிஷா. ஏற்கனவே விஜய்யின் லியோ, மம்முட்டியின் ராம் : பார்ட் 1, தி ரோட் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் தன்னைவிட 6 வயது குறைவான நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கும் ஐடண்ட்டிடி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். என்னை அறிந்தால் படத்தில் கடைசியாக அஜித்துடன் ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. தற்போது 8 வருடம் கழித்து அஜித் படத்திலும் கமிட்டாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *