தமிழ் தவிர்த்து தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கொழுக் மொழுக் என்று இருந்த மெஹ்ரீனை பார்த்ததுமே தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. தமிழ் திரையுலகில் சப்பியாக இருக்கும் நடிகைகள் எல்லாம் திடீர் திடீர் என்று உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகி வருகிறார்கள். இளம் வயதில் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருந்தவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா.நீங்களும் அப்படி ஒல்லியாகிவிடாதீர்கள் மெஹ்ரீன் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் தான் கருப்பு நிற சேலையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் மெஹ்ரீன்.
அதை பார்த்த ரசிக்ரகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எப்படி இருந்த மெஹ்ரீன் இப்படியாகிவிட்டாரே. வெயிட் போனது மட்டும் அல்லாமல் நிறமும் குறைந்தது போன்று இருக்கிறது. மெஹ்ரீனுக்கு என்னாச்சு, ஏன் இப்படி ஆளே மாறிவிட்டார். இதற்கு உணவு அல்ல கவலை தான் காரணமா, எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும் மெஹ்ரீன். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மெஹ்ரீன் பிர்சாதாவுக்கும் ஹிசார் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோயின் மகன் பவ்யா பிஷ்னோய்க்கும் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன்லாலின் பேரன் தான் இந்த பவ்யா. நிச்சயதார்த்தத்தையே மிகவும் பிரமாண்டமாக நடத்தினார்கள்.அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அடேங்கப்பா, நிச்சயதார்த்தமே இப்படி திருவிழா போன்று நடந்திருக்கிறது என்றால் திருமணத்தை பற்றி சொல்லவா வேண்டும். மெஹ்ரீன் கொடுத்து வைத்தவர் என்றார்கள் ரசிகர்கள். அதே ஆண்டு திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் திருமணத்தை தள்ளிப் போட்டார்கள். இதையடுத்து திருமணம் நின்றுவிட்டதாக 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டார்கள்.
2017ல் வெளியான நெஞ்சில் துணிவிந்தால் படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து பிஸியான மெஹ்ரீன், நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். எஃப் 3 படத்தில் முக்கிய ரோலில் நடித்து இந்தியளவில் பிரபலமான மெஹ்ரீன், தற்போது உடல் எடையை குறைத்தும் தோல் சுருங்கி அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 27 வயதே ஆன மெஹ்ரீன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.