கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார். மலையாள நடிகையாக 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமி மேன். கும்கி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான லட்சுமி மேனன் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். இடையில் படிப்பை தொடர்ந்த லட்சுமி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் லட்சுமி மேனன் நல்ல மார்க்கெட் பிடித்து முன்னணி நடிகையாக இருந்தும் அவரது கெரியரை காலி செய்ததே நடிகர் விஷால் தானாம். ஆம், இவர்கள் இருவரும் இணைந்து பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அப்போது இருவரும் நெருக்கமாக நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்கள்.
இதனால் லட்சுமி மேனன் மீது மக்களுக்கு இருந்த அபிப்ராயம் குறைத்து அவரது சினிமா கெரியரே காலி ஆகிவிட்டது. ஆனால் வாய்ப்பு சரியாக அமையாததால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது சிப்பாய் படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 27 வயதாகும் லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மாப்பிள்ளை பிரபல நடிகர் என்றும் அது அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் விஷால் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.