இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது 96 படம். படத்தின் குட்டி ஜானுவாக 18 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் கெளரி ஜி கிஷான்.ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் காலபோக்கில் நடிகராகவும் மாறினார். தற்போது திட்டம் இரண்டு இயக்குநர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். டைம் டிராவல் காதல் கதையில் உருவாகும் இப்படத்திற்கு வகாப் இசையமைக்கிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 96 பட புகழ் நடிகை கவுரி கிஷான் நாயகியாக நடித்து வருகிறார்.
இப்படம் தவிர ட்ராப் சிட்டி, இடி முழக்கம் 13 போன்ற படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் வாத்தி, மார்க் ஆண்டனி, ருத்ரன், சர்தார், கேப்டன் மில்லர், வாடிவாசல் போன்ற பெரிய படங்களுக்கு இசையமைத்தும் வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கொடுத்த வரவேற்பால் நல்ல ஆதரவை பெற்ற கெளரி, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் கெளரி
23 வயதில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தார். தற்போது இசையமைபாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடியே என்ற படத்தில் நடித்துள்ளார் கெளரி. முதன்முதலில் தமிழில் மர்ல்டி வெர்சன் கான்ஸ்செப்ட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சியில் நடித்து அனைவரைக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை கெளரி ஜி கிஷான்.