17 வயதில் முதல் திருமணம், 35 வயதில் 2ம் திருமணம்…! பலரும் பேச தயங்கும் விஷயத்தை பேசிய ரேகா நாயர்…! சர்ச்சையை கிளப்பிய வீடியோ …!

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர்.சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வருபவர் தான் அந்த நடிகை. இவர் சாதாரணமாக பேசினாலே அது பரபரப்பு செய்தியாக மாறிவிடும். அந்த அளவுக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற ரீதியில் தான் இவர் தன்னுடைய விவாதங்களை முன் வைப்பார். அப்படிப்பட்ட இந்த நடிகையின் திருமணம் குறித்த விஷயங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படத்தின் மூலம் அதிக விமர்சனத்திற்கு ஆளானவர் தான் ரேகா நாயர்.மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய இவர் தன் மீது வந்த விமர்சனங்களையும் தைரியமுடன் கடந்து வருவார்.

அதிலும் பயில்வான் ரங்கநாதன் உடன் இவர் நடுரோட்டில் சண்டை போட்டது மிகப்பெரும் சர்ச்சையாக மாறியது. இருப்பினும் இவர் நான் செய்தது சரிதான் என்று தன் போக்கில் இருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது ஒரு பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது இவர் தன் குடும்ப கஷ்டத்தின் காரணமாக 17 வயதிலேயே பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரேகா நாயர், வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குடும்ப கஷ்டம் காரணமாக 17 வயதிலேயே திருமணம் செய்துகொண்டாராம். 18 வயதில் இருக்கும் போதே இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பே அவருடைய கணவர் சில காரணங்களால் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து பல கஷ்டங்களை சந்தித்து வந்த இவர் 35 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம். பலரும் குடும்ப விஷயங்களை பேச தயங்கும் நிலையில் ரேகா நாயர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *