12 பேருக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன்…! தங்கச்சி ஸ்ரீதேவி ரகசியத்தை உடைத்த நடிகை வனிதா…!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகுமார் மகளாக, சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன்பின் சில படங்களில் நடித்து வந்த வனிதா, திருமணம், விவாகரத்து, குடும்பத்துடன் பிரச்சனை என்று பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து பின் சில நாட்களிலேயே அவரின் சுயரூபம் தெரிந்து விலகினார். பின் படங்களில் கவனம் செலுத்தியும் தன் இரு மகள்களை வளர்த்தும் வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என் இரு மகள்கள் மற்றும் மகன் ஸ்ரீஹரி நிச்சயமாக சினிமாவுக்கு தான் வருவார்கள் என்றும் நான் காதலை பிரித்துவிடுவேன் என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் அப்படி எல்லாம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நான் இதுவரை 12 பேருக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறேன். ஒருமுறை காதலர் தினத்தற்கு ஐ லவ் யூ என்று அழுதி க்ரீடிங் கார்ட் அம்மாவுக்கு கொடுத்ததாகவும் அது அம்மாவுக்கு வாங்கவில்லை. நான் காதலித்த ஒருவருக்காக வாங்கி அம்மா அதை பார்த்ததால் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவருக்காக வாங்கினேன் என்று பொய் சொல்லி தப்பித்ததாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.மேலும் என் அம்மா மஞ்சுளா என்னையும் என் தங்கை ப்ரீத்தாவையும் தான் அடித்து வளர்த்தார்கள்.

2வது தங்கை ஸ்ரீதேவியை எப்பவும் அடித்தது இல்லை. ஏனென்றால், சின்ன வயதில் ஸ்ரீதேவி மிகவும் கோபப்படுவார். கோபத்தில் ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு கையில் கிடைப்பதை உடைப்பாள். சிறு வயதில் இருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்ல டிராமா போட்டு எல்லாரையும் ஏமாற்றுவார். அதனாலேயே அவளை யாருமே அடிக்க மாட்டாங்க என்று வனிதா தன் தங்கை ஸ்ரீதேவி பற்றிய ரகசியத்தை கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *