நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக உறுதி செய்யாமல் இருந்து வந்தனர். நேற்று சர்வதேச யோகா தினத்தில் நடிகை தமன்னா யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் என்ன அழகாக யோகா செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். நேற்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் பல நடிகர் நடிகைகள் யோகா செய்யும் புகைப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல விமர்சனங்களை கடந்தும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றிருந்தது. ராதிகா ஆப்தே. க்யாரா அத்வானி, புமி பட்னேகர், மனிஷா கொய்ராலா, விக்கி கவுசல் உள்ளிட்ட பல நடித்திருந்த அந்த சீரிஸை இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கி இருந்தனர்.இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாம் பாகமானது வரும் 29-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதனிடையே நேற்று ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ஆந்தாலஜி சீரிஸின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. இதில் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, திலோதமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர்கள் அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகிய புதிய இயக்குனர்கள் குழு இயக்கி உள்ளனர்.
ஆனால் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இந்தக் காதல் குறித்து தமன்னா ஜாடை மாடையாக தெரிவித்திருந்தார். அதாவது இதன் மூலமாக விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தமன்னா கூறுகையில் விஜய் வர்மா ஒரு பச்சோந்தி எனத் தெரிவித்திருந்தார். அதாவது அதில் அவர் கூறுகையில் “விஜய் என்னை பாதுகாப்பாக உணர வைத்தார்.
அதனால் அவர் மீது பயம் என்பதே இல்லாமல் போனது. எல்லாத்தையும் ஈஸியாக்கினார் விஜய். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்” என்றார்.மேலும் “ஒரு கதாபாத்திரத்தை அணுகும் முறையில் விஜய் ஒரு பச்சோந்தி. கதாபாத்திரத்திற்கு ஏற்ப அவர் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அவர் நடிப்பில் வெளியான அனைத்தையும் பார்த்திருக்கிறேன்” எனவும் தமன்னா அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.