வலிமை படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்தது யார் தெரியுமா? அடடே இவரு சின்னப்பிள்ளையா இருக்கும்போதே பேமஸ் ஆச்சே…

வலிமை படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்தது யார் தெரியுமா? அடடே இவரு சின்னப்பிள்ளையா இருக்கும்போதே பேமஸ் ஆச்சே…

Spread the love

தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பால் அதிகளவு ரசிகர்களைக் கொண்டவர் அஜித். தல அஜித்குமாருக்கு திரையுலகில் மட்டுமல்ல…வெளியிலும் மிகுந்த நல்ல பெயர் உண்டு. மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, இன்று திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருக்கிறார்.

அஜித்குமார் தான் திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே தனது ரசிகர் மன்றங்களைக் களைத்தவர். நமக்குத் தொழில் நடிப்பு, ரசிகர்கள் தனக்காக தங்கள் பொன்னான நேரத்தையும், குடும்பத்தையும் மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தார் அஜித். இதேபோல் அஜித்தை பார்க்க வேண்டுமென்றால் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். தன் படம் சார்ந்த நிகழ்வு துவங்கி, எந்த பொதுநிகழ்விலும் கூட தல அஜித் தலை காட்டுவதில்லை. தல தரிசனத்திற்காக அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அதிலும் அண்மையில் தன்னை தல என சொல்ல வேண்டாம் எனவும் அதிரடி அறிக்கைவிட்டார் அஜீத்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகி வசூலில் பெரிய வெற்றி பெற்ற படம் தான் வலிமை. இந்தப்படத்தில் அஜித்தின் சகோதிரியாக நடித்தவர் யார் என இப்போது தெரியவந்துள்ளது. இதில் சுனயானா என்பவர் நடித்திருந்தார். இவர் வேறு யாரும் இல்லை. கடந்த 1995 ஆம் ஆண்டே வெளிவந்த அம்மன் படத்தில் ‘அம்மன் தாயீ’ என்னும் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஆவார். இவரது அன்றைய குழந்தைப் பருவ படமும், சமீபத்திய படமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


Spread the love
Author Image
Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *