ரயில் நிலையத்தில் பிரபல தமிழ் நடிகை…! புர்கா அணிந்து கூட்டத்துடன் பயணித்த சுவாரஸ்யம்…! யார் அந்த நடிகை தெரியுமா …?

2018-ல் கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்வாதி.சுப்பிரமணியபுரம் ஸ்வாதி புர்கா அணிந்து ரயில் நிலையம் சென்றிருக்கிறார். பிரபலங்கள் பொதுவிடங்களுக்கு செல்லும் போது, அவை செல்ஃபி மற்றும் ஆட்டோகிராப் கோரிக்கைகளுக்கான இடங்களாக மாறுகின்றன. இதனால் பல பிரபலங்கள் வெளியில் செல்வதில் எச்சரிக்கையாக உள்ளனர். இதற்கிடையே பிரபல தமிழ் நடிகை ஸ்வாதி ரெட்டி சமீபத்தில் செய்த விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அதாவது புர்கா அணிந்து முகத்தை மறைத்தவாறு ரயில் நிலையம் வந்திருக்கிறார்.

அந்த வீடியோவை இன்ஸ்டகிராமிலும் பதிவிட்டிருக்கிறார். அதில் அன்பே சிவம் பட பாடலையும் இணைத்துள்ளார். இதற்கு ரசிகர்களிடமிருந்து லைக்ஸ் குவிந்து வருகின்றன. “சுப்பிரமணியபுரம்”, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, “வடகறி”, “யட்சன்”, “யாக்கை” போன்ற தமிழ் படங்களில் நடித்த ஸ்வாதி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ள

அவர், படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே 2018-ல் கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே ஸ்வாதி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து சமீபத்தில் திருமண புகைப்படங்களை நீக்கினார். இதனால் அவர் தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *