ரஜினி, விஜய், அஜித்துக்கு கூட செய்யாத விஷயத்தை…! 57 வயது நடிகருக்கான செய்யப்போகும் நயன்தாரா…!

இந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ஜவான். பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செல்வவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் இணையத்தை அதிரவைத்தது.இதன்பின் எப்போது ஜவான் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.ஜவான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது கதாநாயகன் ஷாருக்கான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் என்பதினால் வழக்கத்தை விட கம்மியாக தான் சம்பளம் வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர். ஜவான் படத்திற்காக ஷாருக்கான் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படங்களுக்கும் ப்ரோமோஷனுக்கு வராத நயன்தாரா தற்போது ஜவான் படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய ஓகே கூறியுள்ளாராம். ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார். இதை அவர் தன்னுடைய கொள்கையாக வைத்துள்ளார். ஆனால், தற்போது தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானுக்காக தனது கொள்கையை நயன் விட்டுக்கொடுக்க போகிறார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *