பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா. இவர் தமிழ் சினிமாவின் 90-களில் இருந்தே பல படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரது மகள் ரவீனா ரவியும் சிறந்த டப்பிங் கலைஞர் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட இவருக்கு புகழ் கொடுத்த படம் “லவ் டுடே” இந்த திரைப்படத்தில் இவர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய ரவீனா ரவி ‘லவ் டுடே’ படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ளார்.அதில், “நீங்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணினால் நன்றாக இருக்கும் என்று பிரதீப் என்னிடம் கேட்டுக் கொண்டார். நம்புங்க நம்பி பண்ணுங்க அப்படினு சொன்னார் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாயை பிளந்த ரசிகர்கள் இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில்-ன் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய ரவீனா ரவி தற்போது கிளுகிளுப்பான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.