புனீத் வீட்டில் தொடரும் சோகம்…! பிரபல நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார்…! திரையுலகினர் அதிர்ச்சி…!

கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பில் திடீரென உயிரிழந்துள்ளார். விஜய் ராகவேந்திரா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான விஜய் ராகவேந்திரா, 2002ம் ஆண்டு ராமோஜி ராவின் தயாரிப்பில் நினககி என்ற படத்தில், ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று, அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரனான விஜய் ராகவேந்திர தொடர்ந்து

கன்னட படங்களில் பிஸியான நடிகராக வளம் வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது நாயகனாக 50 படங்களை கடந்து அவர் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர்.இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்பந்தனா என்ற மகன் உள்ளார். சுற்றுலா சென்ற இடத்தில் துயரம் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் ராகவேந்திர ஓய்விற்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். தாய்லாந்து நாட்டிற்க்கு இவர்கள் சென்ற நிலையில், ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படும் சிகிச்சை பலனின்றி இன்று ஸ்பந்தனா உயிரிழந்துள்ளார். விஜய் ராகவேந்திரா மற்றும் ஸ்பந்தனா தம்பதிகள் தங்களது 16-வது திருமண தினத்தை இன்னும் 19 நாட்களில் கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி இந்த மாதம் 26ந் தேதி தங்களது 16வது திருமண நாளை கொண்டாடவிருந்த நிலையில், நடிகர் விஜய் ராகவேந்திராவிற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். மேலும், ஸ்பந்தனின் உடல் நாளை பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்ட பின், நாளை மறுதினம் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *