தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானார் சமந்தா. ஆரம்பத்திலேயே நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்து பிரிந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை பல ஆண்டுகள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் 4 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதற்கு காரணம் பலவிதமாக கூறப்பட்ட நிலையில் சமந்தா அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கவர்ச்சியாக நடித்து வந்த சமந்தா கடந்த ஆண்டு தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கபட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். கடும் கஷ்டத்தால் அவதிப்பட்ட சமந்தா அதற்கிடையில் படங்களில் நடித்து வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்
தற்போது அதற்கான முழு உடல் சிகிச்சை செய்யவுள்ளார். குஷி மற்றும் சிடெடல் போன்ற படங்களில் நடித்தப்பின் வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்லவுள்ள சமந்தா, சில காலம் ஓய்வெடுக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்தின் இரண்டாம் பாடலான ஆராத்யா வெளியாகியுள்ளது. ரொமான்ஸ் நிறைந்த இப்பாடலில் சமந்தா, நடிகருடன் குளிக்கும் காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.