பாலாவால் சூர்யா படத்தில் ஓட்டம் பிடித்த 19 வயது நடிகை…! மூணு நடிகைகளை தட்டித்தூக்கிய ஜெயம்ரவி…!

தெலுங்கு சினிமாவில் உருவான சுப்பர் 30, உப்பெனா போன்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிருத்தி செட்டி . இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இயக்குனர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார் கிருத்தி செட்டி. ஆனால் இடையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து கால்ஷீட்டை இழுத்தடுத்துக்கொண்டே சென்றதால் கிருத்தி செட்டியும் வழியில்லாமல் அப்படத்தில் இருந்து எஸ்கேப்பாகினார். அப்படத்தை தொடர்ந்து மலையாளம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருந்த கிருத்தி செட்டியை தற்போது ஜெயம் ரவி படத்தில் கமிட் செய்திருக்கிறார்கள்.

விட்டதை எப்படியாவது தமிழ் சினிமாவில் பிடிக்க ஜீனி என்ற படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடிக்கவுள்ளார் கிருத்தி செட்டி.இதனை தொடர்ந்து தற்போது தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரியார் படத்தில் ஹீரோ ராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், அவரிடம் உங்களுக்கு பிடித்த மாஸ் நடிகர் யார் என்று கேள்வி கேட்டகப்பட்டது. இதற்க்கு ‘ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் எனக்கு பிடித்த மாஸ் நடிகர் ‘ என்று பதிலளித்துள்ளார் கீர்த்தி. இந்நிலையில் ஜெயம் ரவி இயக்குனர் மிஷ்கினின்

உதவியாளரான புவனேஷ் இயக்கும் ஜீனி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் கீர்த்தி ஷெட்டி,கல்யாணி பிரியதர்ஷன், WamiqaGabbi ஹீரோயினாக நடிக்கவுள்ளனர். ஜெயம் ரவிக்கு 23 வயது வித்தியாசமுள்ள நடிகை கீர்த்தி ஷெட்டி ஜோடி சேர்ந்து இருப்பது தற்போது கோலிவுட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளது கிருத்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கப்பி போன்ற இளம் நடிகைகளும் நடிகை தேவயானியும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். தற்போது தமிழ் மொழியையும் சகஜமாக பேச ஆரம்பித்ததால் அவர்கள் ரசிகர்கள் மிகப்பெரிய ஏக்கத்துடன் இருந்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *