பார்க்கத்தான் எளிமை, ஆனால் ராஜ வாழ்க்கை…! விஜய் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் தெரியுமா…?

இன்றைய நாளுக்கான நாயகனும் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் தளபதி விஜய் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்பது பற்றி தெரியுமா? நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் விஜய்யை ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர். தந்தை இயக்கிய வெற்றி படத்தில் ஆரம்பித்து தற்போது தளபதி 68 வரைக்கும் வெற்றியுடன் நடைப்போட்டுக்குக் கொண்டிருக்கிறார் விஜய்.

இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா. விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும், தற்போது விஜய் பற்றிய பல தகவல்கள் அதிகம் வைரலாகி வந்துக் கொண்டிருக்கின்றது அதிலும் இவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அனைவரும் சொல்லி வந்த நிலையில் தற்போது அதற்கு அத்திவாரம் இடும் வகையில் பல வேலைகளை செய்து வருகிறார்.மேலும், விஜய் இன்று தனது 49ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றார்.

சொத்து மதிப்பு இந்நிலையில், விஜய்யின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் தான் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார், ஆனால் தற்போது தளபதி 68 படத்திற்கு 200 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.விஜய்க்கு சாலிகிராமத்தில் ஒரு வீடும் நீலாங்கரையில் ஒரு வீடும் இருக்கிறது. இவர் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் பல சொகுசு கார்களையும் வாங்கி வைத்திருக்கிறார்.

அதில் ஆடி A8 L, ரேஞ்ச் ரோவர் எவோக், பி.எம்.டபிள்யூ X5, ஃபோர்டு மஸ்டாங், மெர்சிடிஸ் பென்ஸ் GLA, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், இன்னோவா, வால்வோ XC90 போன்ற சொகுசு கார்களும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விளம்பரங்கள் மூலம் 10 கோடிக்கு சம்பளம் வருகிறதாம். மேலும், இவர் பேரில் பல திருமண மண்டபங்களும் இருக்கிறது அவற்றை வாடகைக்கும் விட்டிருக்கிக்கிறாராம். அப்படி இப்படி பார்த்தால் இவரின் சொத்துக்கள் மட்டும் 445 கோடிக்கு மேல் போகும். நடிகர் விஜய் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் எப்போதும் சிம்பளாக இருக்கும் அவரது குணம் தான் பலருக்கும் அவரின் மீது அதிக விருப்பம் கொள்ள வைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *