தற்போது யூடியூபில் பிரபலமான நட்சத்திரங்களில் கோபி மற்றும் சுதாகர் முதன்மையானவர்களாக இருக்கின்றார்கள்.இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சயமானவர்களாகத்தான் பரிதாபங்கள் youtube சேனலின் கோபி மற்றும் சுதாகர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ட்ரெண்டிங்கில் இருக்கும் சமூக பிரச்சனைகள் பலவற்றையும் தங்களுடைய காமெடி மூலமாக பலரையும் பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் இதில் கோபிக்கு திருமணம் முடிந்தது இந்த நிலையில் இன்று அவருக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது ‘பரிதாபங்கள்’ என்ற சேனலை தொடங்கி இவர்கள் போடும் வீடியோக்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி வருகின்றன.அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், முக்கிய பிரச்சனைகளையும் நகைச்சுவையாக கூறி மக்கள் மனதில் இடம்பிடித்து வருகின்றனர். இவ்வாறாக உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகின்றனர். இந்த இருவரில் கோபிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து தொடர்ந்து கடந்த செப்டெம்பர் மாதம்
கோலாகலமாகத் திருமணம் முடிந்தது. அந்தவகையில் இதற்கு முன்னதாக சுதாகருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது நீண்ட நாள் காதலியுடன் திருமணம் நடந்த நிலையில், கோபிக்கும் தொடர்ந்து செப்டெம்பரில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது .இந்நிலையில் தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கோபி மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கின்றார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் “தகப்பனானேன்… அழகிய மகள் பிறந்துள்ளாள்” என ஸ்டேட்டஸில் கோபி பகிர்ந்துள்ளார். இவரிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.