பண்ணவே மாட்டேன் சொன்ன…! என்ன கொலை செய்ய பார்க்குறாங்க…! கதறிய பிரபல நடிகை தீபா…!

நடிகை தீபா கதறி அழுத வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை தீபா ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தீபா சங்கர். அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் காமெடி காதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. அதன்பின், ‘குக் வித் கோமாளி’யில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில், சமைக்க தெரிந்த பிரபலங்கள் VS ரசித்து ருசித்து சாப்பிட மட்டும் தெரிந்த பிரபலங்கள் என்ற தலைப்பில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் இப்போது விறுவிறுப்பு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் சில நேரங்களில் கலகலப்பாகவும் சில நேரங்களில் உணர்வு பூர்வமான தலைப்புகளில் விவாதங்கள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இப்போது பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ வைரல் அதில் கலந்துக்கொண்ட தீபாவை, தொகுப்பாளர் ஆவுடையப்பன் காஃபி ஒன்றை அருந்தக் கூறி வலியுறுத்தினார். ஆனால் அதனை குடிக்க தீபா மறுத்த நிலையில், அங்கு இருக்கும் பெசென்ட் ரவி தீபாவின்

கழுத்தைப் பிடித்து அந்த காபியை குடிக்க வைத்தார். அப்போது அவர், ஐயோ என் கழுத்தை பிடித்து நெறிக்கிறாங்க. என்னை கொலை பண்ண பார்க்குறாரு. நான் ஜீ தமிழ் மேலேயே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன் என்று கதறினார். இதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படியாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த அதிகமான ரசிகர்கள் எனது பூனை புழுக்கையில் காப்பியா அட பாவமே அதையும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வேற வாங்கி குடிக்கிறாங்களாமே என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *