பணமில்லாமல் கணவரை காப்பாத்த முடியாத நிலை…! இரண்டாம் கல்யாணத்தை நினைத்து பயப்படும் நடிகை பிரேம பிரியா…!

தமிழ் சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து காமெடி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை பிரேம பிரியா. வடிவேலுவுடன் சில படங்களில் இணைந்து நடித்து வந்த பிரேம பிரியாவிற்கு சில வருடங்களாக பல சோகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.அப்பா, மாமனார், கணவர் என்று அடுத்தடுத்த மரணங்கள் பிரேம பிரியாவை தனிமையில் கொண்டு சென்றதாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். நடிகை ஷகீலா எடுத்த பேட்டியில் கலந்து கொண்ட பிரேம பிரியா, கணவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு கால் எடுக்கும் நிலைக்கு சென்றார்.அதன்பின் பணமில்லாமல் காப்பாத்த முடியாமல் போய் இறந்துவிட்டார். என்னை பாசமுடனும் பார்த்து வந்தார் கணவர் என்று தெரிவித்துள்ளார்.அப்படி பாசம் வைத்தவர் பெட்சிட்டை மூடிட்டு ஏன் அடிப்பார் என்று ஷகீலா கேட்டிருக்கிறார்.

நான் அழுதா தாங்கமுடியாதுன்னு தான் அப்படி அடிப்பார் என்று தெரிவித்துள்ளார். வேறேதும் திருமணம் செய்ய பிளான் இருக்கா என்று கேட்டதற்கு அப்படியொரு ஐடியா இல்லை, ஒருத்தர் கேட்டிருக்கிறார், இப்போது வேண்டாம்னு இருக்கேன், பயமா இருக்கு என்றும் தெரிவித்துள்ளார்.இவருடைய கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துவிட்டார். கணவர் இருந்த வரை எந்த ஒரு கஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் இருந்த இவருக்கு, இது மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது. தற்போது தன்னுடைய மகள் படிப்பிற்காகவும்,

வாழ்வாதாரத்திற்காகவும் நடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்பந்தத்தில் வாய்ப்பு தேடி வரும் இவர் வடிவேலுவால் தன்னுடைய பட வாய்ப்புகளை இழந்தது குறித்து பேசியுள்ளார்.கணவர் மரணத்தை தொடர்ந்து, மீண்டும் பட வாய்ப்புகளை தேட துவங்கியுள்ள இவர்… தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இவர் கொடுத்துள்ள இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. வருபவர் எப்படி ஏற்றுக்கொள்வார், என்னால் என் பெண்ணுக்கு பிரச்சனை வரக்கூடாது என்று பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *