படுக்கையில் படுத்துக் கொண்டு அப்படியொரு ரியாக்‌ஷன்…! நம்ம சமந்தாவா இது என குழம்பிய ரசிகர்கள்…!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக உலா வருபவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சகுந்தலம் படத்திற்கு படு மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதையடுத்து இவர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 1 -ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக இவர் ஆடிய கிளாமர் நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இருந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.நடிகை சமந்தா நடிப்பில் கடந்த நவம்பர் 11-ந் தேதி யசோதா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தார் சமந்தா. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வந்தது. குறிப்பாக வெளியான 10 நாட்களில் யசோதா திரைப்படம் உலகளவில் ரூ.33 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.யசோதா படத்தின் வெற்றி சமந்தாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலையில் அவர் இருந்து வருகிறார்.

ஏனெனில் அவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகதவும், தற்போது தான் அதிலிருந்து படிப்படியாக குணமாகி வருவதாகவும் யசோதா படத்தின் புரமோஷனின் போது கூறி கண்ணீர் சிந்தினார் சமந்தா. நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள சமந்தா, தற்போது படுக்கையில் படுத்தபடி ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *