பக்கத்தில் படுக்கமாட்டேன் என சொன்ன மனைவி…! தனது மனைவி தன்னிடம் கூறிய விஷயம் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன டாப் சீக்ரெட்…!

தனது மனைவி தன்னிடம் கூறிய விஷயம் குறித்த சீக்ரெட்டை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல், விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார்.ஹாலிவுட் சென்ற அவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப் விருது, கிராமி விருதுகளை அள்ளினார். இதன் காரணமாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.

நீளமான முடி ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதிக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்கள் உள்ளனர். அவரது ஆரம்பகால அடையாளம் அவர் வளர்த்த நீண்ட முடியாகத் தான் இருந்தது. அந்த முடியோடு வந்தே மாதரம் ஆல்பத்தில் தோன்றிய ரஹ்மானுக்கு அவ்வளவு ரசிகர்கள் உள்ளனர்.ஆனால், அதனை எடுத்துவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், அவரிடம் எதற்காக நீண்ட முடியை எடுத்துவீட்டீர்கள் என தொகுப்பாளர் கேட்க, “அது ஒன்னுமில்லை. நீண்ட முடி வெச்சிருந்தா என் பக்கத்துல படுக்கமாட்டேனு பொண்டாட்டி சொல்லிட்டார். நாங்கதான் அப்படி வெச்சிருக்கோம். நீ ஏன் இப்படி வெச்சிருக்க எனவும் கேட்டுவிட்டார். அதனால்தான் எடுத்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *