நீ கேவலமா இருக்க…! கலாய்த்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்யலட்சுமி ரேஷ்மா…!

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுலடி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து வரும் ரேஷ்மா லைவ் சேட்டில் சில விசயத்தை பகிர்ந்துள்ளார்.

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ”  பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.அந்த வகையில், நடிகை ரேஷ்மா சமீபத்தில் பிரபலத்துடன் Bridal Photoshoot நடத்தினார். அந்த புகைப்படங்கள் வெளியாக விரைவில் மறுமணம் செய்கிறாரா என கமெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள் என்றும்,

இதுகுறித்து ரேஷ்மா, தான் 3 விஷயங்கள் குறித்து பேசுகிறேன் என்றும், Bridal Magazineனுக்காக தான் அந்த போட்டோ ஷுட் நடத்தினேன் என்றும், அதுவும் 1 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அது வெறும் போட்டோஷூட் மட்டும் தான் வேறு எதுவும் இல்லை, அது 1 வருடத்திற்கு முன் எடுத்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு ஒரு நபர் நீ கேவலமா இருக்க என்று கூறியுள்ளார். அதற்கு ரேஷ்மா, ஓகே என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *