நீங்க அதை சொன்ன போது…! 15 நாட்களில் முடிந்த காதல் திருமணம் …! சம்யுக்தாவின் சமீபத்திய பதிவு என்ன தெரியுமா…?

“எல்லாமே சரி ஆகிடும், கவலைப்படாதீங்க, நாங்க எல்லாரும் இருக்கோம்” என மக்கள் தனக்கு ஆறுதல் கூறியதை நினைத்து நெகிழ்ந்து போயுள்ளாராம் சம்யுக்தா. 15 நாட்களில் முடிந்த காதல் திருமணம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சிப்பிக்குள் முத்து” தொடரில் நடித்து பிரபல்யமாகியவர் நடிகை சம்யுக்தா. இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடிக்கும் போது அவருக்கு துணையாக நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றது. ஆனால் இவர்கள் சரியாக 15 நாட்களில் பிரிந்து விட்டார்கள்.

சம்யுக்தா – விஷ்ணுகாந்த் பிரிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இருவரும் மாறி நேரலையில் வந்து அவர்கள் பக்கம் நியாயங்களை பேசி சென்றார்கள். இவர்களின் வாக்குவாதங்கள் நாளடைவில் அதிகமாகி இதனை பல யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்தார்கள்.அதில், சம்யுக்தா தன்னுடைய குடும்பத்துடன் வருகை தந்து, “ விஷ்ணுகாந்த் எனக்கு டார்ச்சர் கொடுத்தார், அவரை விட நான் 10 வயது சிறியவர். என் அப்பா – அம்மா என்னை பார்க்க வரக் கூடாது என கூறினார்.

என்னுடைய நண்பர்களுடன் கூட பேசக் கூடாது.” என கட்டுப்பாடுகள் விதித்தார் என அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். ஆதரவான மக்களுக்காக ஒரு பதிவு இந்நிலையில் சம்யுக்தாவின் பேட்டியை தொடர்ந்து விஷ்ணுகாந்த் அறிக்கையொன்றையும் நேரலையில் வந்து சில விடயங்கயையும் பகிர்ந்துள்ளார்.தொடர்ந்து சம்யுக்தாவின் இன்ஸ்டாவில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “என் மகிழ்ச்சியின் மீது அக்கறை கொண்ட சிலர் “குட் நைட்” படத்தை பார்க்கும் படி கூறினர்.

இதனை கூறிய சிலருக்கு நன்றி. என்னுடைய பிரச்சினைகளை மறந்து சிரித்து கொண்டிருந்தேன். மேலும் “எல்லாமே சரி ஆகிடும்.. கவலை படாதீங்க.. நாங்க எல்லாரும் இருக்கோம்” என பேசிய என்னுடைய மக்களுக்கு என்னுடைய மனம் சார்ந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பதுடன் இதனை பார்த்த ரசிகர்கள், “ பிரச்சினைகள் வரும் போகும் எதுவும் நிரந்தரமில்லை” என ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Samyutha (@samyutha.official)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *