“நாயை தொட்டால் இதையும்…! மனுஷனை தொட்டா இதையும் பண்ணுவேன்…! வரலட்சுமியை விளாசும் ரசிகர்கள்…!

நடிகை வரலட்சுமி சரத்குமார் , போடா போடி படத்தில் சிலம்பரசன் ஜோடியாக அறிமுகமானார். வயது 38 ஆகியும், இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னை பொண்ணு இவர். நடிகர் விஷாலை, காதலிப்பதாக ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இரு்ப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.இவர் நடிகர் சரத்குமாரின் மகள். சரத்குமாரின் முதல் மனைவி சாயாவிற்கு பிறந்த மகள். ஆனால், சாயாவை பிரிந்த சரத்குமார், நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.இப்போது தந்தை சரத்குமார் – ராதிகா பராமரிப்பில் வரலட்சுமி இருந்து வருகிறார்.

போடா போடி, மதகஜ ராஜா, தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, அம்மாயி, கண்ணாமூச்சி, வர்கம், பகையே காத்திரு, கன்னித்தீவு, பொய்க்கால் குதிரை, இரவில் நிழல், யசோதா, காட்டேரி, கன்னிராசி, நீயா 2, எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் பகுதி, சந்திரமெளலி, சர்கார், மாரி 2, நிபுணன், சத்யா, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில், வரலட்சுமி நடித்திருக்கிறார்.இதில் சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் இவர், வில்லி கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தாரை தப்பட்டை படத்தில், சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

சரத்குமாரின் மகள் என்பதால் மட்டுமின்றி, நல்ல நடிப்பாற்றல் மிக்க நடிகை என்பதால், வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் அதிகளவில் குவிகிறது. இவர் குண்டான உடல் தோற்றத்தில் இருந்ததால், பட வாய்ப்புகள் சற்று குறைந்து போனது. இதையடுத்து தனது உடல் எடையைக் குறைத்து, தற்போது ஸ்லி்ம் தோற்றத்துக்கு மாறி, படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துவரும் வரலட்சுமி, மலையாளம், கன்னடம் படங்களில் நடிக்கவும் முயற்சித்து வருகிறார்.

தெலுங்கில் இவரது ரணம், கஸாப்பா படங்கள், நல்ல வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் வரலட்சுமி சரத்குமார், அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். தவிர வெளியிடங்கள், ஷூட்டிங் ஸ்பாட், வெளிநாடுகள், சினிமா நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும், அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில்

உடனடியாக வந்துவிடுகிறது.இந்நிலையில், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், நாயை தொட்டு விட்டு.. கையை கழுவாமல் பல் குத்துவது கூட செய்வேன். ஆனால், மனுஷனை தொட்டால் கையை வேறு எங்கும் வைக்காமல் உடனடியாக கையை கழுவுவேன் என்று குறிபிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது என்றாலும் கூட பலரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும் வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *