நான் அந்த மாதிரி தொழில் செய்ததால் சிறை தண்டனை…! கசப்பான அனுபவத்தை சொன்ன ஷங்கர் பட நடிகை…!

பாய்ஸ் படத்தில் ஒரு சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் புவனேஸ்வரி. அதற்கு முன்னதாகவே அவர் சந்திரலேகா, ஒரு கை ஓசை, ராஜராஜேஸ்வரி, தெக்கத்தி பொண்ணு, சித்தி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களில் குடும்பப் பாங்கான மற்றும் வில்லத்தனமான வேடங்களில் நடித்த புவனேஸ்வரி சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி வேடங்களைதான் ஏற்று நடித்தார். சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தாலும் பாய்ஸ் படத்தில் ஒரு விபச்சார பெண்ணாக நடித்து பிரபலமானார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க புவனேஸ்வரி மிகவும் தயங்கியதாகவும், ஆனால் இயக்குனர் ஷங்கர் அவரை சமாதானப் படுத்தி நடிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதுபற்றி ஷங்கர் “இந்த காட்சியில் நான்கு ஆண்களோடு நீ நடித்தாலும், அவர்களின் விரல் கூட உன் மேல் படாது” எனக் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.அந்த படத்தின் மூலம் பிரபலமான புவனேஸ்வரிக்கு தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகளே குவிந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது தான் அந்த வழக்கில் திட்டமிட்டு மாட்டிவிடப்பட்டதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் பேசும்போது “நான் நடிகையாக மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டதால் சிலரால் திட்டமிடப்பட்டு விபச்சார வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன். நான் இந்த வழக்கில்

நீதிமன்றத்தில் வாதாடி அதிலிருந்து வெளியே வந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “கற்பு என்பது புனிதமானது. பலரும் என்னைப் பற்றி தவறாக எழுதி என் பெயரைக் கெடுத்துவிட்டனர். அதனால்தான் நான் இப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில்லை. தெலுங்கு படங்களில் மட்டுமே நடிக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜாதேவி. அவருக்கு கிடைத்தது போல பலவிதமான வேடங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. நான் பல போராட்டங்களைக் கடந்தும் உறுதியாக இருப்பதற்கு என் தாய்தான் காரணம்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *