நயன்தாராவை விட பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள் செய்த விஜய் பட ஹீரோயின்…! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா …?

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளாக பல ஹீரோயின் வலம் வந்தாலும் சிலர் மட்டும் தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் வயது 40-யை தொட்ட போதிலும் மவுசு கொஞ்சம் கூட குறையாமல் சினிமாவில் கலக்கி வருகின்றனர்.ஹீரோவுக்கு இணையான சம்பளம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். வசீகர அழகின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் கொண்டுள்ளனர். பொதுவாக பிரபலமடைந்த ஹீரோயினின் திருமணம் குறித்து அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகம் தான்.

அந்த வகையில் கடந்த ஆண்டு முன்னணி நடிகையான நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் மிக விமர்சையாக நடந்தது. இந்த திருமணத்தின் பிரம்மாண்டம் குறித்து பேசாத ரசிகர்கள் இருக்கவே முடியாது.வரிசையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக வலம் வரும் நடிகை திரிஷாவின் திருமணம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. திரிஷா தற்போழுது விஜய்யின் 67 வைத்து திரைப்படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா 40 வயதை தொட்ட நிலையில்

ஏன் இன்னும் திருமணம் செய்ய வில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணம் செய்து கொண்டால் தனது திரைத் துறை மார்க்கெட் இழந்து விடுவோம் என்பதால் தள்ளி போடுவதாகவும் சிலர் கருத்துக்கள் முன் வைக்கின்றனர்.ஆனால் கடந்த பத்து வருடத்திற்கு முன் திரிஷா சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்தில் அவருக்கு மிக பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. பிரபல தொழிலதிபர் வருண்மணியன் அவர்களுடன் திரிஷாவுக்கு திருமண செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திருமண பேச்சு நிச்சயதார்த்தம் வரை வந்து அதன் பின் நின்று விட்டது. அந்த நேரத்தில் திரிஷாவிடம் இது குறித்து கேட்டபோது, இது இருவிட்டார்கள் கலந்து எடுத்த குடும்ப விஷயம் என்பதால் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என கூறினார். இந்நிலையில் பல முன்னணி ஹீரோக்களுடன் பல கிசுகிசுக்கள் வந்தாலும் எதற்கும் கவலை படாமல் தனது திரைத்துறையில் சாதனையை படைத்து கனவு கன்னியாகவும், அழகு மிக்க குந்தவையாகவும் திரிஷா ரசிகர்கள் மனதில் உச்ச நட்சத்திரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *