நடிகை லட்சுமி மேனனுக்கும் எனக்கும் கல்யாணமா…! பயங்கர கோபத்தில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் போது சங்கத்தின் கட்டடம் கட்டியப்பின் தான் என் திருமணம் என்று பல ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார். ஆனால் 45 வயதை எட்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் விஷால். இந்நிலையில் விஷால் பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருந்தார். சமீபத்தில் நடிகை லட்சுமி மேனனுக்கும் விஷாலுக்கு திருமணம் என்ற செய்தி இணையத்தில் உலா வந்துள்ளது.

அதெல்லாம் பொய் யாரும் நம்ப வேண்டாம் என்று விஷால் தரப்பில் கூறி வந்த நிலையில் நடிகர் விஷாலே இணையத்தில் ஒரு பதிவினை போட்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.அதில், என்னை பற்றிய போலியான செய்தியோ வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பது கிடையாது, அதே தேவை இல்லாத ஒன்று என்று நான் நம்புகிறேன். நடிகை லட்சுமி மேனனுடனான எனது திருமண வதந்தி பரவி வருவதால் அதை மறுப்பதோடு அது முற்றிலும் உண்மை இல்லை, ஆதாரமில்லை.

நான் இதற்கு பதிலளிக்க காரணம் இதில் ஒரு நடிகையை ஈடுபடுத்தி இருப்பதற்காக தான். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரது பெயரையும் கெடுக்காதீர்கள். இது வெறும் பெர்மூடாவின் முக்கோணம் கிடையாது, ஆண்டு தேதி, நேரம் என்று யாரை நான் திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ரகசியமாக வைக்க. நேரம் வரும் போது நானே என் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக கூறுவேன் என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார் நடிகர் விஷால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *