நடிகர் ரஜினிகாந்த் பவுண்டஷன் பெயரில் ரூ.2 கோடி பண மோசடி…! அதிர்ச்சி தகவல்…!

பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் ரூ.2 கோடி பண மோசடி செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தென் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் தான். இவர் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். இவரது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.இவர் தற்போது வரை திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்பொழுது இவரது மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால் சலாம் மற்றும் இயக்குனர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

மோசடி இந்நிலையில், இவரது பெயரில் பவுண்டேஷன் ஒன்று சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பண மோசடி செய்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் முகவரியை உருவாக்கி 200 பேரிடம் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து சுமார் 2 கோடி வரை பண மோசடி செய்துள்ளது என்று

ரஜினிகாந்த் பவுண்டேசன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.மேலும் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர் என்று புகாரில் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *