நடிகர் சமுத்திரகனி மனைவியா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க… அவரது அழகிய குடும்பப் புகைப்படம் இதோ…!!

சமுத்திரகனியைப் பொறுத்தவரை எப்போதும் சமூக அக்கறையுள்ள படங்களில் தான் நடித்துவருகிறார். அவர் உன்னை சரணடைந்தேன் என்னும் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இவர் இயக்கிய சுப்பிரம்ணியபுரம் திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. பருத்திவீரன் படத்திலும் கஞ்சா கருப்போடு சேர்ந்து ஒரு காட்சியில் சமுத்திரக்கனி வருவார். முதலில் சமுத்திரகனி கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தார். ஆரம்பத்தில் உதவி இயக்குனர் ஆவதை விட நடிப்பதில் தான் சமுத்திரகனிக்கு ஆர்வம் இருந்திருக்கிறது.

பாலசந்தர் தான், பார்த்தாலே பரவசம் படத்தில் விவேக்கோடு ஒரு காட்சியில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்தார். இன்று சமூக அக்கறையுள்ள அதிலும் கருத்துச் சொல்லும் பாத்திரம் என்றாலே சமுத்திரகனி கால்ஷீட்டைத்தான் முதலில் வாங்குகின்றனர்.

ஹீரோ, வில்லன், குணச்சித்திரப் பாத்திரம் என தான் நடிக்கும் படங்களில் எல்லாம் அப்லாஷ் அள்ளுகிறார் சமுத்திரகனி. நடிகர் சமுத்திரகனியின் மனைவி பெயர் ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இருகுழந்தைகள் உள்ளனர்.

இதில் இவரது மகன், சமுத்திரகனியின் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார். இவரது அழகிய குடும்பப் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சமுத்திரகனியின் மனைவி அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *