நடிகருடன் காதல் உறவில் இருந்த ஐஸ்வர்யா ராய்…! இதனால் மாமியார் கொடுத்த டார்ச்சர்…! கண் கலங்கி நின்ற நடிகை …!

1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி உலகம் முழுவதும் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் 1997 -ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்தார். இதன் பின் பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை 2007 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.மாமியார் மருமகள் பிரச்சனை என்பது தொன்றுதொட்டு வளர்ந்து வரும் ஒன்று. அதற்கு உலக அழகி மட்டும் விதிவிலக்கா என்ன. சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் மாமியார் ஜெயாவிற்கும், மருமகள் ஐஸ்க்கும் முட்டிக் கொள்ள, விளைவு வீட்டை விட்டு வெளியேறக் கூடிய நிலைக்கு வந்திருக்கிறது.

போதாக் குறைக்கு நாத்தனாரிடமும் டிஷ்யூம் போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் இது எல்லாமே வெறும் செய்திதான் என்றும் ஐஸ்வர்யா ராய். வீட்டை விட்டு வெளியேற மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னால் உள்ள முக்கிய காரணம் அபிஷேக்கிற்கு பெற்றோர் என்றால் மிகவும் பிடிக்கும். எந்த காரணத்திற்காகவும் அவர் பெற்றோரை விட்டு பிரிய மாட்டார். இது நம்ம ஐஸ்வர்யா ராய்க்கும் நன்றாக தெரியும் எனவே இவர் தனியாக செல்ல மாட்டார்.

மேலும் அந்த புதிய அபார்ட்மென்டை முதலீட்டுக்காக வாங்கியள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு முன்பு நடிகர் சல்மான் கானை ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்தார். சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் பிரிந்தனர்.ஐஸ்வர்யாவிற்கு முன்பு கரிஷ்மா கபூருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் கரிஷ்மா தனிக்குடித்தனம் போக விரும்பியதால் திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது. பச்சன் குடும்பத்தில்

இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதலில் ஐஸ்வர்யா ராய்யை மருமகளாக ஏற்க அபிஷேக் பச்சனின் அம்மா விரும்பவில்லை. மேலும் அபிஷேக் பச்சன் வாழ்க்கை இதனால் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் திருமணத்திற்கு நோ சொன்னாராம். அப்போது ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் கொஞ்சமாக மாமியாரிடம் நல்ல பேர் வாங்கி திருமணத்திற்கு ஓகே சொல்லவைத்தாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *