விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கவின். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு புகழ் உச்சிக்கே சென்றார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இவர் சக போட்டியாளர் லாஸ்லியாவை காதலித்து வந்தது போன்று தான் பேசிக் கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இந்நிலையில் கவின் நீண்ட நாள் தோழியாக இருந்த மோனிகாவை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. கவினின் காதலி மோனிவா அவரின் காஸ்ட்யூம் டிசைனர் ஆகவும் பியூட்டிசன் ஆகவும் இருந்து வருகிறாராம். திருச்சிற்றம்பலம் பட பாணியில் இருவரும் சிறுவயதில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் பல வருடங்கள் ஒன்றாக இருந்தாலும் இருவருக்குள் இருக்கும்
காதலை தெரிந்து கொள்ளாமல் இருந்ததாகஎன்று கவின் கூறி இருக்கிறார். இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு நெஞ்சமெல்லாம் காதல் என்கிற பாடலை ஒலிக்க விட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கவினின் திருமணத்திற்கு லாஸ்லியா ரியாக்ஷன் இது தானா? என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.