திருமணமாகி ஒரே வருடத்தில்…! விஜய் டிவி சீரியல் நடிகையின் கணவர் உயிரிழப்பு…! வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!

சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’என்ற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.ஸ்ருதி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்றாலும் அவருடைய திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. இந்தத் திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் கொஞ்சம் பிரேக் எடுத்திருந்தார். அவர் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஸ்ருதி – அரவிந்த் இருவரின் பேச்சுலர் பார்ட்டி நேற்று நடைபெற்றிருக்கிறது. இந்த பார்ட்டியில் ‘ரோஜா’ சீரியல் பிரபலம் பிரியங்கா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவ்யா, ‘நாதஸ்வரம்’ பென்ஸி உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களை ஸ்ருதி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.  அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அத்தோடு 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் வக்கீலும், பொறியாளரும், உடற்பயிற்சி ட்ரையினராக இருந்த அரவிந்த் சேகர் என்பவரை 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது ஸ்ருதியின் கணவர் உயிரிழந்துள்ளார். அதாவது அரவிந்துக்கு தற்போது கார்டியாக் அரஸ்ட் என சொல்லப்படும் இருதய முடக்கம் ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. திருமணமாகி ஒரு வருடங்களே ஆகியிருக்கும் நிலையில் அரவிந்த் சேகர் இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *