தாடி பாலாஜி எவ்வளவு கெட்டவரு தெரியுமா? பிக்பாஸ் அல்டிமேட் சர்ச்சை! வீடீயோ ரிலீஸ் செய்வேன் என எச்சரிக்கும் மனைவி நித்யா….!!

தாடி பாலாஜிக்கு தமிழில் அறிமுகமே தேவையில்லை. காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ப்ரோகிராம்களில் நடுவராக இருந்தவர். பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் இவரும், இவரது மனைவியும் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர்.அங்கு இவர்களது சண்டை இன்னும் கொஞ்சம் தமிழகம் முழுவதும் இவர்களைக் கொண்டுபோய் சேர்த்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு, தாடி பாலாஜியை அடிக்கடி வெவ்வேறு ஷோக்களில் பார்க்க முடிந்தது. ஆனால் நித்யா அதன் பின் மீடியாக்கள் முன்பு தலைகாட்டவில்லை. இதுவரை பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்றவர்களைக் கொண்டு ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதில் இந்த சீசனில் தாடி பாலாஜியும் இருக்கிறார். இந்நிலையில் இவர் பற்றி, இவரது மனைவி நித்யா அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது மகளும் பக்கத்தில் இருக்கிறார்.

குறித்த இந்த வீடியோவில் பேசும்போது, ‘தாடி பாலாஜி தொடர்ந்து எனது கேரக்டரை அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். எனக்கு இப்போது இதைப்பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இனியும் அவர் அதைத் தொடர்ந்து செய்தால் என்னை அவர் அசிங்கமாகத் திட்டிய வாய்ஸ் மைசேஜை வெளியிடுவேன்.

என்னோட பொண்ணையும் தாடி பாலாஜி அசிங்கமாத் திட்டுனாரு. அதோட ஆடியோவும் என்கிட்ட இருக்கு. இது மட்டும் இல்லாமல் நல்லா குடிச்சுட்டுட்டு அவரோட டிரைவரை வைச்சு என்னை போனில் திட்டவிட்டு பக்கத்தில் இருந்து ஹேப்பியாக சிரிக்கிறாரு. அந்த ஆடியோவும் என்கிட்ட இருக்கு. இனியும் என் கேரக்டர் பத்தி பாலாஜி தப்பா பேசுனா, ஒவ்வொன்ணையா என்னோட யூடியூப்பில் ரிலீஸ் செய்வேன்.’’என ஆவேசமாகப் பேசியுள்ளார். தாடி பாலாஜி, நித்யா சண்டை இன்னும் ஓயவில்லையா சாமி? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *