தற்கொலைக்கு முயன்ற கமல் ஹாசன்…! கடைசி நேரத்தில் காப்பாற்றிய பிரபலம்…! அவர் யார் தெரியுமா…?

உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் சினிமாவிக் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.

1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். பின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.  இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர்.

ஒவ்வொரு படத்திலும் பல தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார் அதை நாம் பார்த்து இருப்போம்.ஒரு கட்டத்தில் கமல் ஹாசன் தற்கொலை செய்ய முயன்று இருக்கிறார். அந்த நேரத்தில் கமலுக்கு சில அறிவுரை கூறி இயக்குனர் ஆனந்து காப்பாற்றியதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது கமல் ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *