ஜிம் டிரெய்னருடன் நெருக்கமாக லாஸ்லியா…! ‘உங்க அப்பா இருந்திருந்தால் இப்படி எல்லாம் பண்ணுவீங்களா…?” திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்…!

பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. அவர் அந்த ஷோவில் இருந்து வெளியில் வந்தால் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். மேலும் ஹீரோயின் என்றால் ஒல்லியாக தான் இருக்கவேண்டும் என எழுதப்படாத விதி இருப்பதால் லாஸ்லியா தனது உடல் எடையை அதிகம் குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவரைப் பிடிக்காதவர் என்று யாருமே இல்லை. இருப்பினும் இடையில் கவினுடன் காதலில் சிக்கி குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாகினார். அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு இவரைக் காண வந்த தந்தை கோபத்தில் இவரைத் திட்டி இருந்தமை நம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது அவர் கடந்தாண்டு மரணமடைந்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்தது. அந்தவகையில் இவர் நடிப்பில் ‘பிரெஷன்ஷிப்’ என்றார் படம் வெளியாகி இருந்தது.

இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் மேலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி இன்றுவரை நடித்து வருகின்றார்.இந்நிலையில் அடக்கவொடுக்கமாக இதுவரை காலமாக இருந்த லாஸ்லியா சமீபகாலமாக கிளாமர் லுக்கிற்கு மாறி கவர்ச்சியை அள்ளி வீசி வருகின்றார். அந்தவகையில் தற்போது ஜிம் டிரெய்னருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “உங்க அப்பா இருந்தால் இப்படி எல்லாம் பண்ணுவீங்களா..?” எனக் கேட்டுத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *