சொன்னதை செய்து காட்டிய அசீம்…! பிக்பாஸில் வென்ற பணத்தை என்ன செய்தார்…? ஆச்சர்யாத்தில் ரசிகர்கள்…! வாழ்த்துக்கள் தெறிவித்த பிரபலங்கள்…!

பிக்பாஸில் வென்ற பணத்தை கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த அசீமின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. நடந்து முடிந்த பிக்பாஸ் சீசனில் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச்சென்றார் அசீம், மிக ஆக்ரோஷமாக விளையாடிய அசீம் பலருக்கும் தகுந்த மரியாதை அளிக்கவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.அசீமுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் கடைசியில் அசீம் வெற்றியாளரானார்,

விக்ரமன் தான் வென்றிருக்க வேண்டும் என சர்ச்சைகளும் எழுந்தது.அசீம் வெற்றி பெற்றது கமலுக்கே கூட பிடிக்கவில்லை என ரசிகர்கள் கமெண்டுகளை குவிக்கத் தொடங்கினர். அசீமுக்கு 50 லட்ச ரூபாயும், காரும் பரிசாக வழங்கப்பட்டது, அப்போது பேசிய அசீம், ‘நான் வெற்றி பெற்ற 50 லட்சத்தில் 25 லட்சம் ரூபாயை கொரோனாவால் பெற்றோர்களை

இழந்த மாணவர்களுக்கு கொடுப்பேன் என கூறியிருந்தார். இதன்படி, தான் சொன்னதை நிறைவேற்றி விட்டதாகவும், அறக்கட்டளை ஒன்றை தொடங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அசீமின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *