சும்மாவே செம்ம அழகா இருப்பாங்க.! இப்ப கேக்கவே வேணாம்.! இவங்க அழகுக்கு முன்னாடி உலக அழகி எல்லாம் சும்மா.! ஜோதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

இப்போது தமிழ் திரைப்படத்தில் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள், அந்த வகையில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா இடுவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.இப்போது நடிகை ஜோதிகாவின் புகைப்படம் அதிக அளவில் வெளியாகி வருகிறது, இவர் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்னர் 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த படம் “உடன்பிறப்பே”. இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு மனைவியாகவும் சசிகுமாருக்கு தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருந்தார் ஜோதிகா.

ஆனால் நடிகை ஜோதிகா தன்னுடைய சினிமா வாழ்க்கையை சூர்யாவுடன் திருமணம் ஆனதில் இருந்து நடிப்பதை விட்டுவிட்டார் என்பது தான் உண்மை, ஆனால நடிகை ஜோதிகா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் தனக்கு வந்தால் மட்டுமே நடித்து வருகிறார் அந்த வகையில் 36 வயதினிலே, ராட்சசி போன்ற படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தனது கணவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். 2d என்டேர்டைன்மென்ட் என்னும் அந்த நிறுவனத்தின் மூலமாக சில படங்களை தயாரித்து உள்ளனர்.

அதே போல தான் நடிகர் சூர்யா தனுடைய சினிமா வாழ்க்கையில் ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் கிடைத்த கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அந்த வகையில் விக்ரம் படத்தில் சின்ன ரோலில் நடித்து இருப்பார்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் தற்போது பாலா இயக்கத்தில் ‘சூர்யா 41’ படப்பிடிப்பில் இருக்கிறார், அதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, வெற்றிமாறன் வாடிவாசல், லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம் 3’மற்றும் ‘அயலான்’ புகழ் ரவிக்குமார் ஆர்.

ஆனால் இப்போது நடிப்பை மட்டுமே நம்பி இல்லாமல் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து மிகவும் நல்ல முறையில் நடத்தி வருகிறார் நடிகர் சூர்யா, அந்த வகையில் தம்பி கார்த்தி நடித்ட விருமன் என்ற திரைப்படத்தை நடிகர் சூர்யா 2d என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தான் இந்த படத்தை தயாரித்து இருந்தார்.சூரரைப் போற்றி திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜோதிகாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது.தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருவது வழக்கம்.

முக்கியமாக சமீபத்தில் கூட நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே தேசிய விருதினை பெற்று இருந்தார்கள், அதன் பின்னர் தான் நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.தற்போது தலைமுடியை வெட்டி குட்டி குழந்தை போல மாறி இருக்கிறார் ஜோதிகா.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வெளியாகி வருகிறது. குழந்தைகள் வெட்டும் பாப் கட்டிங் போல வெட்டிக்கொண்டு cute ஆக அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *