சிறு வயதில் வேலைக்காரனால் நடந்த பாலியல் கொடுமை…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை வரலட்சுமி…!

அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி கசப்பான அனுபவங்களை வரலெட்சுமி பகிர்ந்துள்ளார். தமிழில் மட்டும் தற்போது 10 படங்களுக்கு குறைவில்லாமல் மிகவும் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதை மற்றும் சிறந்த கதாப்பாத்திரம் கிடைத்தால் போதும் தமிழ் சினிமாவில் நிலைத்து விடலாம் என்பதை நன்கு புரிந்துக்கொண்டு நடித்து வருகிறார். இவர் எவ்வளவு தான், பிஸியாக நடித்து வந்தாலும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ‘சக்தி’ என்கிற அமைப்பையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம், திரைத்துறையில் பணியாற்றும் அனைத்து நடிகைகளுக்கும் பாலியல் ரீதியாக நடைப்பெறும்

வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குழந்தைகள் மேல் நடத்தப்படும் பாலியல் வன்முறை குறித்தும் சிறு வயதில் தனக்கு நடந்த பாலியல் வன்முறை குறித்தும் முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி. சிறு வயதில் தன்னுடைய அப்பா, சரத்குமாரிடம் சுந்தரமூர்த்தி என்பவர் வேலை செய்து வந்ததாகவும். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

actress varalaxmi “அப்போது அது பற்றி யாரிடம் சொல்வது என்று கூட தனக்கு தெரியாது. மேலும் அவர் தன்னிடம் தவறாக நடந்தார் என்பதே வளர்ந்த பிறகு தான் தனக்கே புரிந்தது என்று வெளிப்படையாக கூறியுள்ள வரலட்சுமி. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மற்றவர்கள் தொடுவது பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும், யாராவது தகாத இடத்தில் தொட முயன்றால் அனுமதிக்க கூடாது என சொல்லிக்கொடுங்கள்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *