சிம்ரனின் தங்கையின் தற்கொலைக்கு இவர் தான் காரணமா..? அம்பலமாகிய உண்மை…!!

நடிகைகளின் தற்கொலை என்பது சர்வ சாதாரண ஒரு விடயமாக மாறிவிட்டது. பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அல்லது காதல் தொடர்புகள், அதிகமான மன அழுத்தம் போன்றவற்றால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில் சிலரின் தற்கொலைச் செய்திகள் இரண்டு வாரங்களுக்கு அனைவராலும் பரவலாகப் பேசப்படுகின்றது. அதற்குப் பின்னர் அதை அப்படியே மறந்துவிட்டு புதியதொரு விடயத்துக்குள் சென்று விடுவர்.

ஆனால், ஒரு நடிகை இறந்து 20 வருடங்களாகியும் இன்னும் அவரது மரணம் குறித்ததான விடயங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆம், நடிகை சிம்ரனின் தங்கையும் நடிகையுமான மோனலின் மரணம் குறித்ததான செய்திகள் தான் அது. கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் 90களில் அனைவரதும் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தார். இவரது மரணம் மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மோனல் இறந்த சமயத்தில் நடிகை சிம்ரன் அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுத்தார். மோனலின் மரணத்தின் பின்னர் பல வதந்திகள் பேசப்பட்டன. அதாவது அப்போது மோனலுடன் ஜோடியாக நடித்த குணாலுடன் ஏற்பட்ட காதலில் பிரச்சினை வந்ததால்தான் தற்கொலை செய்துகொண்டார் எனவும் நடன இயக்குநர் கலா மாஸ்டரின் தம்பியான பிரசன்னாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

வீட்டினரின் எதிர்ப்பு காரணமாக பிரசன்னா மோனலுடனான காதலை துண்டித்துக் கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த மோனல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும், அந்த நேரம் சிம்ரன் பிரசன்னா மீது வழக்குப் பதிவும் செய்துள்ளார். இந்நிலையில் மோனலின் தற்கொலை செய்தி வெளிவரத் தொடங்கியதுமே நடிகை மும்தாஜ் மோனலின் வீட்டுக்குச் சென்று முக்கிய டையரி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாராம்.

நடிகை மும்தாஜ் மற்றும் கலா மாஸ்டர் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது சிம்ரனின் சந்தேகம் தற்போது வேறொரு நடிகர் மீது திரும்பியுள்ளது. அது வேறு யாருமில்லை, விஜய் மற்றும் மோனல் நடித்த திரைப்படமான பத்ரியில் விஜய்க்கு அண்ணனாக நடித்த ரியாஸ் கான் மீதுதான்.

ஏனென்றால் மோனல் இறப்பதற்கு முன்னர் அவரிடம் ரியாஸ் கான்தான் கடைசியாக பேசியிருக்கிறார். ரியாஸ் கான் கலா மாஸ்டருக்கு நெருங்கிய சொந்தம். இதுதான் சிம்ரனின் சந்தேகத்துக்கு காரணம். 20 வருடங்களாகியும் இன்னும் இந்த தற்கொலைக்கு யார் காரணமென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *