சிம்புவுடனான காதல்…! உண்மையா..? இல்லையா..? இளம் நடிகையுடன் ரகசிய டேட்டிங்…! வசமாக மாட்டிக்கொண்ட சிம்பு…!

நடிகை நிதி அகர்வால், சிம்புவை காதலிப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், அவரே சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ‘பூமி’ ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது. மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் நிதி அகர்வால் அவ்வப்போது காதல் வலையிலும் சிக்கி வருகிறார். அதன்படி தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். ஜோடியாக டேட்டிங்கெல்லாம் போன இவர்கள் திடீரென பிரேக் அப் செய்தனர்.

தற்போது சிம்பு மீது நிதி அகர்வாலுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும். இருவரும் நெருக்கமாக பழகி வருவதோடு, ஒரே வீட்டில் லிவ்விங் டூகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து இருவரும் மவுனம் காத்து வந்த நிலையில், தற்போது நிதி அகர்வால் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “நம்மைப் பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதில் சில உண்மையும் இருக்கலாம், சில உண்மைக்கு மாறானதாகவும் இருக்கலாம்.

எது உண்மை, எது உண்மை இல்லை என்பது நம் பெற்றோருக்கு தெரிந்தால் போதும். மக்கள் பேசுவதெல்லாம் பள்ளியில் போடும் நாடகம் போன்றவைதான். நாம் செய்யும் வேலைதான் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும். அதற்காக காத்திருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.நடிகர் சிம்பு வெறித்தனமாக கம்பேக் கொடுத்து தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இ ந்நிலையில் இளம் நடிகையாகா வலம் வரும் நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஈஸ்வரன் படத்தில் நடித்த போது காதல் மலர்ந்ததாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது நிதி அகர்வால் சிம்பு ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நிதி அகர்வாலை நடிக்க வைக்க சிம்பு சிபாரிசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *