சமந்தா பெயரில் இட்லி கடை வைக்க நினைத்த பிரபல நடிகர்…! அதுவும் ஏன் தெரியுமா…? யார் அந்த நடிகர் என்று தெறிச்ச நிங்களே ஷாக்காயிடுவிங்க …!

நடிகை சமந்தா தற்போது சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்திருக்கும் நிலையில், அவர் நடித்துள்ள குஷி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்குபவர் சமந்தா. அவருக்கு சமீப காலங்களாக பாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் நடிப்பில் ‘குஷி’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.பல்லாவரத்தில் பிறந்து தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகை சமந்தா.

விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து பிரபலமான சமந்தா, தற்பாேது இந்திய திரையுலகின் பிசியான நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், கடைசியாக ‘சாகுந்தலம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த போதே அவர் ‘குஷி’ என்ற தெலுங்கு படத்திலும் ‘சிட்டடெல்’ என்ற இந்தி தொடரிலும் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தசை பிடிப்பு நோயான ‘மயோசிடிஸ்’ பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சையில் இருந்ததால்

எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அப்போது சமந்தா குறித்து பேசிய அவர், அவருக்கு மயோசிடிஸ் நோய் தாக்கியதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு

குஷி படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், சமந்தா படப்பிடிப்புக்கு வராத சமயத்தில தானும் தன்னுடைய படத்தின் இயக்குநரும் சமந்தா குறித்து பேசிய விஷயத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். சமந்தா குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன போது பாதி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் அவர் 10 வருடங்கள் கழித்து உடல் நிலை சரியாகி வரும் போது அடுத்த பாதியை எடுத்து கொள்ளலாம் என நகைச்சுவையாக படக்குழுவினருடன் பேசிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

அதுவரை, சமந்தா பெயரில் படப்பிடிடப்பு தளத்திலேயே ஒரு இட்லி கடையை திறக்கலாம் என இயக்குநர் சிவாவுடன் பேசியதாக அவர் தெரிவித்தார்.  சமந்தா, சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடிப்பில் பிசியாக இருந்தார். நோய்வாய்பட்ட போதும், அவர் ‘சாகுந்தலம்’ படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து கொஞ்சம் கெஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பிய அவர், இந்தியில் வருண் தவானுடன் ‘சிட்டடெல்’ தாெடரில் நடித்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் இத்தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

சமந்தா, குஷி மற்றும் சிட்டடெல் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பிறகு பிரேக் எடுக்கப்போவதாக முன்னரேகூறியிருந்தார். இந்த சமயத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், உடல் நலனில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தன் முடியை பாதியாக வெட்டிக்கொண்டு தோழிகளுடன் பல இடங்களுக்கு சென்று சுற்றி வருகிறார். இவர், சுமார் 6 மாதங்களுக்கு சினிமா பக்கம் வரமாட்டார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *