கேன் தண்ணிக்கே கஞ்சம் பார்ப்பான் வடிவேலு…! வெளுத்து வாங்கிய நடிகை சாரப்பாம்பு சுப்புராஜ்…!

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருபவர் நடிகர் வடிவேலு. அவருக்கென்று தனிக்குழுவை வைத்து பல படங்களில் அவர்களுடன் காமெடி காட்சிகளை அமைத்து வந்தார் வடிவேலு. இடையில் வடிவேலுவின் மார்க்கெட் சரிய, அவருடன் நடித்த சக காமெடி கலைஞர்கள் வடிவேலு செய்த பல காரியங்களை பற்றி பகிர்ந்து வருகிறார்கள். அப்படி வடிவேலுவுடன் நடித்த நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ், வைகைப்புயல் தனக்கு செய்த காரியத்தை பகிர்ந்துள்ளார்.வடிவேலு பார்த்தாலும் சரி பார்க்கலனாலும் சரி, நான் அவரோடு சேரமாட்டேன்.

என் தாய் தகப்பனைவிட நான் அண்ணன் விஜயகாந்தை பார்க்கிறேன்.  அவரை தப்பா பேசியவனை பார்க்க மாட்டேன். விஜயகாந்த் என்னிடம் வடிவேலுவை நடிக்க சொல்லி என்று என்னிடம் சொன்னதும் எதுக்கு அடிக்கவா என்று கிண்டலாக சொன்னேன். இதை வடிவேலுவிடமே சொன்னேன் என்று தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், விஜயகாந்த், மயில்சாமி மாதிரி வடிவேலு உதவி செய்வார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இந்த பிரவியில் அது நடக்காது. எம்ஜிஆர் அவரை யாரைவைத்தும் ஒப்பிட்டு பேச முடியாது. வடிவேலு எல்லாம் கஞ்ஜன், உலகத்திலே கஞ்ஜன். தண்ணிக்கே கணக்கு பார்த்தவன் வடிவேலு. எங்க குரூப்பில் யாருக்கும் செய்யல வடிவேலு என்று சுப்புராஜ் கூறியுள்ளார். வடிவேலு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று காட்டமாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *