கெட்ட வார்த்தையில் திட்டிய ராதிகா? கடற்கரையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்…!!

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் தன்னை பார்த்த போது அசிங்கமாக பேசி நடிகை ராதிகா சண்டையிட்டதாக தெரிவித்துள்ளார் நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.  சினிமா பிரபலங்கள் பற்றி பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிகொள்கிறார். அந்த வகையில் அவருடைய யூடியூப் சேனலில் நடிகை ராதிகாவின் அம்மா குறித்து தவறாக பேசியதாகவும், அதுபற்றி கேட்டு ராதிகா தன்னிடம் சண்டையிட்டதாகவும் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால், சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ராதிகா அவரை வழிமறித்து தன் தாயை பற்றி எப்படி அவதூறாக பேசி இருக்கிறாய்? என தகாத வார்த்தைகளால் சண்டை போட்டிருக்கிறார். பின் இருவரும் நேருக்கு நேர் நின்று மோத சண்டை முற்றியுள்ளது,

ஒரு கட்டத்தில் நான் தவறாக பேசியிருந்தால் வழக்கு போடுங்கள் என கூறிவிட அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே பயில்வான் ரங்கநாதன் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோவில், திருவான்மியூர் கடற்கரையில் என்னை தவறான வார்த்தையில் ராதிகா பேசினார்.

அது எப்படிப்பட்ட வார்த்தைகள் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், அது எனக்கு தான் அசிங்கம். அவர்களுக்கு அசிங்கம் இல்லை. ஏனென்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு தெரியும். நானே அவர்களைப் பற்றி நிறைய தடவை சொல்லி இருக்கேன். ஆனால், நான் ராதிகாவை பற்றி பொய்யாக எதுவும் பேசவில்லை.

நான் சந்தித்தவை பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து தான் பேசி இருக்கிறேன். இதில் வெறும் 60 சதவீதம் தான் அவரைப் பற்றி சொல்லியிருக்கிறேன் என்று பேசி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *