கெஞ்சியும் கால் விரலைக் கூட தடவ விடவில்லை…! ஹன்சிகாவை அசிங்கப்படுத்தி சர்ச்சையில் ரோபோ சங்கர்…!

பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகாவை குறித்து இழிவாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹன்சிகா மோத்வானி தமிழில் பாட்னர் என்ற படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் படித்துள்ள இப்படத்தினை மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார். இம்மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசியுள்ளனர். அப்பொழுது ரோபோ சங்கர் ஹன்சிகாவை குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பாட்னர் படத்தில் உள்ள முத்தக்காட்சியை அதிகமாக ரசித்து பர்ப்பீர்கள்… ஹன்சிகா ஒரு மெழுகு சிலை… மைதா மாவை உருட்டி சுவற்றில் அடித்தால் ஒட்டிக்கொள்ளும் அவ்வாறு அவர்கள்… அவர்களுடைய காலை தடவுற மாதிரிய ஒரு காட்சி படத்தில் இருந்தது.பொருள் ஒன்றினை தொலைத்துவிட்டு அதை கீழே தேடும்போது அவரது முட்டிக்கு கீழே உள்ள காலை தடவனும். அந்த காட்சியில் அவர் காலில் கூட விழுந்து கெஞ்சிப் பார்த்தேன்… காலின் கட்டைவிரலையாவது தடவிக்கொள்கிறேன் என்று ஆனால் அவர் முடியாது.

ஹீரோ மட்டும் தான் தன்னை இவ்வாறு தொட வேண்டும். வேறுயாரும் தொடக்கூடாது என்று கூறியுள்ளார். அப்பொழுது ஹீரோ ஹீரோ தான்… காமெடியன் ஓரமாகதான் இருக்கனும் என்று முகம்சுழிக்கும் அளவிற்கு பேசியுள்ளார். இதற்கு பத்திரிக்கையாளர் கொந்தளித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்துப் பாட்னர் படக்குழு சார்பில் ரோபோ சங்கரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஜான் விஜய் தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *